1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (10:03 IST)

ஜூலை 24ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Election Commission
நாடு முழுவதும் விரைவில் காலியாக இருக்கும் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
மேற்கு வங்கத்தில் உள்ள ஆறு ராஜ்யசபா எம்பிகள், குஜராத்தில் உள்ள மூன்று ராஜ்யசபா எம்பிக்கள் மற்றும் கோவாவில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என மொத்தம் 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிவடையவுள்ளது 
 
இந்த புள்ளி இந்த நிலையில் இந்த பத்து இடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லுசின்ஹோ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூலை 24ம் தேதி அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran