செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 மே 2021 (09:05 IST)

உலக சுகாதார மையமே உ.பி அரசை பாராட்டுகிறது… மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

உத்தர பிரதேச அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார மையமே பாராட்டியுள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் அமைந்துள்ள புதிய கொரோனா மருத்துவமனையை ராணுவ அமைச்சரான ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘உத்தர பிரதேச அரசு வீடு வீடாக கொரோனா பாதித்தோரை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.’ எனக் கூறியுள்ளார். ஆனால் உத்தர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாமல் பல நோயாளிகள் இறந்தனர். மேலும் உத்தர பிரதேச முதல்வர் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடாமல் யாகம் போன்றவற்றை செய்துவருவதாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பாராட்டு வந்துள்ளது குறிப்பிடத்தகக்து.