செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (08:15 IST)

கொரோனாவை ஒழிக்க ருத்ராபிஷேக பூஜை… இணையத்தில் எழுந்த கேலி!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ருத்ராபிஷேக பூஜை நடத்தியது இணையத்தில் கேலியை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி அதிகளவில் பாதிப்புகளையும் உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையின்மையே என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் பாஜக தலைவர்கள் கொரோனா பரவலை தடுக்க ஆக்கப்பூர்வமான பணிகள் எதையும் செய்யாமல் இருப்பதாக இணையத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்தவகையில் உத்தர பிரதேச முதல்வரும் பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் நேற்று ஒருமணி நேரம் கொரோனா பரவலைத் தடுக்க கோரக்பூரில் ருத்ராபிஷேக பூஜை செய்துள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மேலும் கண்டனங்களையும் கேலிகளையும் உருவாக்கியுள்ளன.