நடிகர் கார்த்தி ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்பிய நபர் – ஏன் தெரியுமா?
நடிகர் கார்த்தி நெப்போலியன் சுல்தான் படத்தின் படப்பிடிப்பில் நடித்து முடித்ததும் ஏர்போர்ட் வரை சென்று அவரை வழியனுப்பியுள்ளார்.
நடிகர் நெப்போலியன் தனது மகனின் உடல்நிலைக்காக இப்போது அமெரிக்காவில் தங்கி வருகிறார். இதனால் அவர் தனக்கு வந்த பல வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் அங்கு சென்று இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துமுடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவுடன் இருக்கும் தொடர்பு விடுபட்டு போய்விட கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் தமிழில் நடிக்கிறார். அப்படி இந்த ஆண்டு அவர் கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து வந்து நடித்துக் கொடுத்துள்ளார். தனது காட்சிகள் முடிந்ததும் போய்வருகிறேன் எனக் கார்த்தியிடம் சொல்லியுள்ளார்.
இதையடுத்து நெப்போலியன் ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது அங்கே வந்த கார்த்தி அவருக்கான உதவிகள் எல்லாம் செய்து அவர் ஏர்போட்டுக்கு செல்லும் வரை கூடவே இருந்து வழியனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து நெப்போலியன் கேட்டபோது எனக்காக நீங்கள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளீர்கள். உங்களுக்காக நான் இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி? எனக் கேட்டு நெகிழ வைத்துள்ளராம். இதை சமீபத்தில் நெப்போலியன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.