1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:02 IST)

ரோடுன்னா அது கேத்ரீனா கைஃப் கன்னம் மாதிரி இருக்கணும்! – ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

ராஜஸ்தானில் அமைச்சர் ஒருவர் சாலைகள் நடிகையின் கன்னம் போல இருக்க வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் பலர் பொதுவெளியில் பேசும்போது உவமை கூற எதாவது பேசும்போது அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறான நிகழ்வு ஒன்று ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் ஒரு நிகழ்வில் பேசும்போது சாலைகள் தரமாக அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். அப்போது சாலைகள் நடிகை கேத்ரீனா கைஃபின் கன்னங்களை போல வழுவழுப்பாக இருக்கும் வகையில் தரமாக அமைக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இதுபற்றி பேசும்போது, அமைச்சராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொதுவெளியில் ஒழுக்கத்துடன், நாகரிகமாக பேச வேண்டும் என கண்டிக்கும் வகையில் பேசியுள்ளார்.