வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (22:04 IST)

குடியுரிமை என குழந்தைக்கு பெயர் வைத்த தம்பதிகள்

புதிய குடியுரிமை சீர்திருத்த சட்டம் மக்களவையில் கடந்த திங்கட்கிழமையும் மாநிலங்களவையில் நேற்றும் தாக்கல் செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறியது. திமுக காங்கிரஸ் உள்பட ஒருசில எதிர்க்கட்சிகள் இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் போதுமான வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு இல்லாததால் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மசோதா விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
ராஜஸ்தானில் உள்ள ஒரு தம்பதிகள் இந்த குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறியதை அடுத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்து நேற்று தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ’குடியுரிமை’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் கடந்த 7 ஆண்டுகளாக தாங்கள் இந்தியாவில் அகதிகளாக இருப்பதாகவும் இந்த சட்ட மசோதா தங்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் என்றும் குடியுரிமை பெற்ற பெற்றால் இந்தியாவில் உள்ள சலுகைகளை தங்களால் அனுபவிக்க முடியும் என்றும் அதன் காரணமாகவே தங்களது குழந்தைக்கு குடியுரிமை என பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்