வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (07:24 IST)

நவம்பர் மாத ராசி பலன்கள் 2023 - தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் லாபஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
என் வழி தனி வழி என்று செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில்  ஈடுபடாமல்  தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21