1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (07:43 IST)

கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை: மகிழ்ச்சியில் ஹைதராபாத் மக்கள்

வெயில் வாட்டி வதைத்து வந்த ஹைதராபாத்தில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


 

 
ஹைதராபாத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
 
தெலங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, 50 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய கன மழை கொட்டியது. இதனால், ஹைதராபாத் பகுதி மக்கள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.