புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 ஜூலை 2017 (20:41 IST)

வெஜ் பிரியாணியில் பல்லியை சேர்த்து, நான்-வெஜ் பிரியாணியாக மாற்றிய ரயில்வேஸ்!!

ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை புகைப்படம் எடுத்து ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்துள்ளனர். 


 
 
ஜார்க்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது அனைவரையும் முகம் சுலிக்க வைத்தது.
 
இது தெரியாமல் உணவை உண்ட ஒரு பயணி மயங்கி விழுந்தார்.  இதனால் கோபமடைந்த பயணிகள் கேட்டரிங் பணியாளர்களிடம் பல்லி விழுந்த உணவைக் காட்டி முறையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் சரியான பதிலளிக்காமல் சென்றுள்ளனர். 
 
இது குறித்து தகுந்த விசாரணை நடப்படும் என முஹல்சராய் ரயில் நிலைய மூத்த அதிகாரி கிஷோர் குமார் கூறியுள்ளார்.