சகல வசதிகளும் வேண்டுமா? பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடிவு!
பயணிகளிடம் ரயில்வே வாரியம் நிதி ஆதாரத்தை திரட்ட முடிவெடுத்து அதன்படி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்தியன் ரயில்வே ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்க முடிவெடுத்து இதற்கான நிதியை திரட்டும் பணிகளை முன்னெடுத்துள்ளது. எனவே, பயணிகளிடம் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது எந்தெந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதி அதிகரிக்கப்படுகிறதோ, அந்த ரயில் நிலையங்களில் மட்டும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணத்தால் பயணிகளுக்கு பெரும் சுமை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் உள்ள ஏழாயிரம் ரயில் நிலையங்களில் 15 சதவீத நிலையங்களில் மட்டுமே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.