மீண்டும் கண்ணடித்து மாட்டிக்கொண்ட ராகுல்காந்தி

Rahul
Last Modified சனி, 5 ஜனவரி 2019 (08:33 IST)
மக்களவையில் ரபேல் விவகாரம் தொடர்பான காரசார விவாதத்தின் போது, ராகுல்காந்தி கண்ணடித்த விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
நேற்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தொடரில் ரபேல் விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தத்தில், பாஜக மிகப்பெரிய ஊழல் செய்திருப்பதாகவும், இதற்கு பயந்துகொண்டே மோடி கூட்டத்தில் பங்குபெறவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
 
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறது. நாட்டின் பாதுகாப்பை துளியளவும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் இதைப்பற்றி பேச தகுதியே இல்லை என பேசினார்.
 
அப்போது பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை கொடுத்திருகலாமே, அதற்கு பதில் நிதிச் சுமையில் இருக்கும் ரிலையன்ஸுக்கு ஏன் இந்த வாய்ப்பை அளித்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு ராகுல் காந்தி எக்ஸ்சலெண்ட் எக்ஸ்செலண்ட் என கை தட்டினார். மேலும் அவர் அருகிலிருந்தவர்களை பார்த்து கண்ணடித்தார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராகுல் ஏற்கனவே இதே போல் கண்ணடித்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :