1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (16:20 IST)

கேரளாவிற்கு 7 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் வெள்ள பாதிப்பால் பாதிப்படைந்த கேரளாவிற்கு 7 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல் நிலச்சரிவால் அம்மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. இம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப இன்னும் ஒருசில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் கேரள மக்களை மீண்டும் சகஜநிலைக்கு கொண்டு வர இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமின்றி உலக நாடுகளிடம் இருந்தும் கோடிக்கணக்கில் நிதிகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் சார்பாக கேரளாவிற்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும், என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ், கேரள மாநிலத்தின் வெள்ள நிவாரண நிதியாக தனது கேட்ஸ் பவுண்டேசன் மூலம் ரூ.4¼ கோடி நிதியாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.