1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (06:57 IST)

உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.58 கோடியாக உயர்வு: 10.41 லட்சமாக உயர்ந்த பலி எண்ணிக்கை!

உலக அளவில் கொரோனாவிற்கு  3,53,87,541 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,66,09,676 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,41,538 பேராக அதிகரிப்பு என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7,736,327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,636,185 எனவும், பலியானோர் எண்ணிக்கை 214,609 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,848,074 எனவும் உயர்ந்துள்ளது. 
 
இதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,622,180 எனவும், பலியானோர் எண்ணிக்கை 101,812 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 102,714எனவும் உயர்ந்துள்ளது. இதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,915,289 எனவும், பலியானோர் எண்ணிக்கை 146,375 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,263,208எனவும் உயர்ந்துள்ளது
 
ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது