1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (19:11 IST)

சீனாவில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா : மீண்டும் ஆரம்பிக்கும் பிரச்சனை!

tested
சீனாவில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் கொரோனா பிரச்சினை இந்தியாவில் தலைதூக்கி உள்ளதாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது
 
சீனாவில் தினமும் கோடிக்கணக்கானவர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சீனா உள்பட மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து ஆக்ரா வந்தவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆக்ராவின் முக்கிய பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva