1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (08:25 IST)

ராகுல் காந்தியின் அலுவலகத்தை சூறையாடிய கும்பல்: கேரளாவில் பரபரப்பு

Rahul Gandhi
கேரளாவில் உள்ள வயநாடு என்ற பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனார். அதன்பிறகு அவர் வயநாடு பகுதியில் நிரந்தரமாக ஒரு அலுவலகத்தை வைத்துள்ளார் என்பதும் அந்த அலுவலகத்திற்கு அவர் அவ்வப்போது வந்து செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கேரளாவில் வயநாடு பகுதியில் உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் கட்சி அலுவலகத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மேஜை நாற்காலிகளை உடைத்து உள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது 
 
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.