1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rahul Gandhi missing poster goes viral

ராகுல் காந்தியை காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு!!

ராகுல் காந்தி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ராகுல் காந்தியை காணவில்லை என நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. 
 
கடந்த பிப்ரவரி மாதம் அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அதன்பின் தனது தொகுதி பக்கம் செல்லவில்லை.
 
இந்நிலையில், அமேதி தொகுதி முழுவதும் பல இடங்களில், ராகுல் காந்தியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 
 
மேலும், அந்த போஸ்டரில், ராகுலைக் கண்டுபிடித்து தருபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அவர் வராததால், தொகுதியில் முடிக்க வேண்டிய நலத்திட்ட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என அச்சிடப்பட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலின் கருப்பு கண்ணாடி போட்டுள்ளதால்...: விளாசிய தமிழிசை!