1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 18 மே 2017 (05:44 IST)

கருணாநிதி வைரவிழாவில் ராகுல்காந்தி

தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வைரவிழ நடத்த திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வரும் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


இந்த நிலையில் இந்த விழாவில் ஏழு மாநில முதல்வர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இந்த விழாவில் கலந்து கொள்வது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.