செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (19:48 IST)

ஹெலிகாப்டரின் கோளாறை நீக்க உதவிய ராகுல் காந்தி

நாட்டில் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஐந்துகட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும், முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பழுதடைந்த ஒரு ஹெலிகாப்டரை சரி செய்ய உதவியது போன்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
 
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ராகுல் காந்தி, இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா நகருக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் பயணித்த ஹெலிகாப்டரில் சிறிது கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து  ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளதாவது :
பெரிய அசம்பாவிதம்ம் சிக்கல் ஏதுமில்லை. மேலும்கூட்டுமுயற்சியால் விரைவாகவே பழுது சீர் செய்யப்பட்டுள்ளது.என்று பதிவிட்டுள்ளார்.