வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (23:04 IST)

திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி.! ராகுல் காந்தி விமர்சனம்..!!

ragul malli
பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றியைக் குறிக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
 
பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தது.
 
இந்நிலையில் 11 குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்குவதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தத் தீர்ப்பு உள்துறை அமைச்சகம் மற்றும் குஜராத் அரசின் "தவறான செயல்களை" அம்பலப்படுத்துகிறது என்றும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் பாஜக எப்படி ஒரு பெண்ணுக்கு நீதியை மறுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது என்றும் கூறினார். பாஜகவின் "பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் உண்மை முகத்தை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது என்றும் விமர்சித்துள்ளது.
 
ragul gandhi
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குற்றவாளிகளின் பாதுகாவலர்" யார் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் காட்டியுள்ளது என்றார்.
 
தேர்தல் ஆதாயங்களுக்காக ‘கொலை நீதி’ என்ற போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது என்றும்  பில்கிஸ் பானுவின்  அயராத போராட்டம், திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றியைக் குறிக்கிறது என்றும் ராகுல் காந்தி  மேலும் கூறினார்.