1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:59 IST)

இரவு முழுவதும் சட்டசபையில் தூங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

இரவு முழுவதும் சட்டசபையில் தூங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!
கர்நாடக மாநில சட்டமன்றத்தில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தூங்கியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இந்தியாவின் தேசியக் கொடி காவி கோடியாக மாறும் என்று பேசியிருந்தார். அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்
 
 இதனையடுத்து நேற்று சட்டமன்ற தொடர் முடிந்தவுடன் வெளியே செல்லாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் என்பதும் இரவு முழுவதும் சட்டமன்றத்திலேயே அவர்கள் படுத்து தூங்கி தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது