1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (08:15 IST)

1350 ரயில்கள் ரத்து; பல கோடி இழப்பு! – பஞ்சாபை உலுக்கிய போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாபில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால் ரயில்வே துறை கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசால் கடந்த சில மாதங்கள் முன்னர் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன. அதை தொடர்ந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் போராட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் பஞ்சாபில் நடந்து வரும் நிலையில் விவசாயிகள் பலர் ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் உள்ளிட்ட 1350 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனால் நிலக்கரி உள்ளிட்ட கனிம போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ரூ.1200 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.