செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (12:58 IST)

சபரிமலையில் இன்று நடைதிறப்பு –காலில் விழுந்து கெஞ்சும் போராட்டக்காரர்கள்

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற்அ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 28 அன்று  தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு ‘பெண்களுக்கு நீண்டகாலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள்தான். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல.  எனவே, அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு பலதரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிக்கின்றன. சபரிமலை தேவஸ்தானம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ’தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை’ என சபரிமலை கோவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கேரள அரசும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஐய்யப்ப பக்தர்களும், பல இந்து அமைப்புகளும் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. பாஜக மற்ற எல்லா அமைப்புகளையும் திரட்டி   பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 5 நாள் பேரணி ஒன்றை நடத்தியது. போராட்டக்காரர்களை போலீஸ் தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டியது. இந்த போராட்டங்களுக்கு எதிர்ப் போராட்டம் நடத்த ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்து தேதி அறிவித்துள்ளது.

இதுசம்மந்தமாக பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர் போன்றோரும் தங்கள் சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரகளோடு தேவசம் போர்டு உறுப்பினர்கள் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக இன்று ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பெண்பக்தரகள் ஐய்யப்பனை தரிசிக்க மாலையிட்டு விரதம் இருந்து வருகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த போராட்டக்காரர்களும் பாஜக கேரள பெண்கள் அணித் தலைவர் ஷோபா சுரேந்திரன் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு பெண்பகதர்கள் வராமல் தடுத்து வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு காங்கிரஸ் செயல் தலைவர் கே சுதாகரனும் நேரில் சென்று ஆதரவைத் தெரிவித்துள்ளார்

போராட்டக்காரர்கள், பெண்கள் ஆகியோர் பம்பை நோக்கி வரும் வாகனங்களை சோதனையிட்டு அதில் பெண்கள் இருந்தால் இறக்கி திருப்பி அனுப்புகின்றனர். மேலும் பெண் பக்தர்களின் காலில் விழுந்து திரும்பி செல்லுமாறும் வேண்டிக்கொள்கின்றனர்..
பெண் பக்தர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்த போதும் போராட்டக்காரர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் போராட்டக்காரர்களை திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன்னர்.

எனவே நிலக்கல் மற்றும் பம்பை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.