வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (08:14 IST)

சபரிமலையில் இன்று முதல் 5000 பக்தர்கள் அனுமதி: ஆனாலும் ஒரு சிக்கல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலை உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருந்தன என்பது தெரிந்ததே. இருப்பினும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது 
 
ஆனால் நாள் ஒன்றுக்கு 2,000 பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று முதல் சபரிமலைக்கு 5,000 பக்தர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் 5000 பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இன்று காலை வரை சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்ய இணையதளத்தில் வசதிகள் செய்யப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவாங்கூர் தேவஸ்தான இணையதளத்தில் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்ய எந்தவித வசதிகளும் செய்யப்படாததால் சபரிமலையில் இன்று 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவ்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த சிக்கல் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது