வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:55 IST)

ப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்! பிரியங்கா காந்தி டுவீட்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ப.சிதம்பரம் தற்போது எங்கே இருக்கின்றார் என்று தெரியாத நிலையில் இன்று அவருடைய முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டால் ப.சிதம்பரம் கைதை தவிர்க்க முடியாது என்பது குறிப்ப்பிடத்தக்கது
 
ப.சிதம்பரம் அவர்களை கைது செய்ய எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட பல காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சற்றுமுன் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 
 
மத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் தான் சிதம்பரம் வேட்டையாடபடுவதாகவும், எந்த சூழலிலும் காங்கிரஸ் அவருக்கு துணை நிற்கும் என்றும் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த பொருளாதார மேதையும் நிதியமைச்சராகவும் இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ஒருவரை வேட்டையாடுவது வருத்தத்திற்கு உரியது என்றும், உண்மை எப்போதும் வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.