1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (11:44 IST)

அடம் பிடித்த அகிலேஷ் யாதவ்.. பிரியங்கா தலையிட்டதால் முடிந்த தொகுதி உடன்பாடு..!

Priyanka Gandhi
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 11 தொகுதிகள் மட்டுமே கொடுப்பேன் என்று அகலேஷ் யாதவ் அடம்பிடித்த நிலையில் பிரியங்கா காந்தி தலையிட்டு சமாதான பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் தற்போது 17 தொகுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா கூட்டணி பல இடங்களில் தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அதே பிரச்சனைகள் இருந்தது. 
 
முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறிய அகிலேஷ் யாதவ் அதன்பிறகு 11 தொகுதிகள் என இறுதி செய்தார். இந்த நிலையில் சோனியா காந்தியின் அறிவுரையின் பெயரில் பிரியங்கா காந்தி களத்தில் இறங்கி அகிலேஷ் யாதவ் உடன் நேருக்கு நேர் பேசியதில் 19 தொகுதி வரை பிரியங்கா காந்தி கேட்டார்.
 
 அதன் பிறகு 17 தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டு விட்டதை அடுத்து தற்போது இந்தியா கூட்டணி பிரச்சனை இல்லாமல் உத்தர பிரதேச மாநிலத்தில் தொகுதி உடன்பாடுகளை முடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran