விமானத்திற்கும் இந்த நிலைதானா?? ட்விட்டரில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

Last Updated: புதன், 12 ஜூன் 2019 (16:50 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லவிருந்த விமானம் ஒன்று டயர் வெடித்த நிலையில் மீண்டும் தரையிறங்கிய செய்தி பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு துபாய் செல்லவிருந்த தனியார் விமானம், ஓடுதளத்திலிருந்து பறக்க முற்பட்டபோது அதன் டயர்களில் ஒன்று வெடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அந்த விமானம் அவசர நிலையில் மீண்டும் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. மேலும் டயர் வெடித்த நிலையில் தரையிறங்கிய விமானத்தை ஒருவர் வீடியொ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.    இதில் மேலும் படிக்கவும் :