தமிழக அரசின் மசோதாக்கள் கிடப்பில் போட்ட வழக்கு: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!
தமிழக அரசு இயற்றிய மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநருக்கு சாராமாக கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று வாதங்கள் நடைபெற்றன. மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதாக கூறிய ஆளுநருக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தமிழக சட்டசபையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி மௌனமாக இருக்கலாமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆளுநர் மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படி தெரியும் என்றும் நீதிபதிகள் கேள்விகளை முன்வைத்தனர்.
ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நிலையில், இன்று பிற்பகல் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva