வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 11 மார்ச் 2017 (18:55 IST)

தூங்கிய சிறைக்காவலர்கள்; சுவர் ஏறி தப்பிய கைதி

மங்களூரு சிறைச்சாலையில் பாதுகாப்பு இருந்த காவலர்கள் துங்கி கொண்டிருந்த நேரத்தில் கைதி ஒருவர் தப்பியுள்ளார்.


 

 
கர்நாடகா மாநிலத்தில் ஜின்னப்பா(42) என்பவர் மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று சிறையில் இவருக்கு சமையல் அறையில் வேலை கொடுத்துள்ளனர். சமையல் அறையில் கேஸ் கசியும் சாவனை வந்துள்ளது. இதனை பார்க்க ஜின்னப்பா சமையல் பின்பக்கம் என்னவென்று பார்க்கச் சென்றுள்ளார்.
 
அப்போது அந்த பகுதியில் காவலுக்கு இருந்த காவலர்கள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். இதைக்கண்ட ஜின்னப்பா சுவறி ஏறிக் குதித்து தப்பி சென்றார். சிறைக் காவலர்கள் அப்போதும் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
 
மாலை வழக்கம் போல் அனைத்து கைதிகளுக்கும் வருகைப் பதிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஜின்னப்பா காணாமல் போயிருப்பதை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்த போது, ஜின்னப்பா சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. 
 
இதையடுத்து ஜின்னப்பாவை காவல்துறையினர் தேதி வருகின்றனர். மேலும் ஜின்னப்பா கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.