குஜராத்தில் ராணுவ உற்பத்தி ஆலை.. பிரதமர் திறந்த வைத்த ஆலையின் சிறப்புகள்..!
பிரதமர் மோடி இன்று குஜராத்தில் ராணுவத்திற்கான விமான உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைந்துள்ள ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவன வளாகத்தை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி இந்த ஆலையை திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் ராணுவத்திற்கு தேவையான சி 295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய ராணுவத்திற்கு சி 295 ரகத்தை சேர்ந்த 56 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும், மீதமுள்ள 40 விமானங்கள் வதோதராவில் டிஏஎஸ்எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ளன.
விமான தயாரிப்பில் டாடா மற்றும் பாரத் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்களிப்பை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edited by Siva