1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (13:15 IST)

பாஜக ப்ளானை வைத்து பாஜகவையே முடிக்க திட்டம்: கர்நாடகாவில் உச்சகட்ட பரபரப்பு!

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி விலகவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால், இந்த ஆட்சி நிலைப்பதில் சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
 
இந்நிலையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் முதலமைச்சர் குமாரசாமி தனது ராஜினாமா முடிவை அறிவிக்க இருப்பதாகவும், அரசைக் கலைக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று பரிந்துரை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. 
ஆனால் இதை மறுத்துள்ள அவர், நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். 2008 - 2009 ஆம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகள் யாருக்கும் ஞாபகம் இல்லையா? என்று கேள்வி எழுப்பிவிட்டு நகர்ந்தார். 
 
ஆம், கடந்த 2008 -2009 ஆம் ஆண்டு 18 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பா ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த அப்போதைய ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார். 
ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு சட்டசபையில் வாக்கெடுப்புக்கு வரவிருந்த தினத்தின் அதிகாலையிலேயே, அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் போப்பய்யா.
 
எனவே, பாஜகவை உதாரணமாக இதேபோல் குமாரசாமி தனது ஆட்சியை தக்க வைத்து பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கிறார் குமாரசாமி என மஜத் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.