திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (18:20 IST)

உபியில் ஓடும் மின்சார ரயிலில் குழந்தை பெற்ற பெண்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து கோரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
நேற்று இரவு கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து கோரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சிட்டாபூர் ரயில் நிலையத்தை அடைந்த போது அங்குள்ள டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
ஆனால், அப்பெண்ணிறகு பிரசவ வலி அதிகமாக இருந்ததால் அவருக்கு ஓடும் ரயிலில் பிரசவம் பார்க்கப்பட்டது. அந்த பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் அவர் ஆம்புலன்ஸில் பாதுக்காப்பாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.