பிரதமர் குப்பை சுத்தம் செய்யும் வரைக்கும் நீங்கெல்லாம் என்ன செஞ்சீங்க? – பிரகாஷ்ராஜ் கேள்வி!

prakash raj
Prasanth Karthick| Last Updated: சனி, 12 அக்டோபர் 2019 (20:15 IST)
இன்று பிரதமர் மோடி கடற்கரையை சுத்தப்படுத்திய வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சீன அதிபரை சந்திப்பதற்காக மாமல்லபுரம் வந்த பிரதமர் இன்று காலையில் அங்குள்ள கடற்கரையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். அப்போது அங்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற குப்பைகள் கிடப்பதை பார்த்த அவர் அவற்றை வெறும் கைகளாலேயே சுத்தம் செய்திருக்கிறார். இதை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட அவர் மக்கள் தங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ்ராஜ் “பிரதமரின் பாதுகாவலர்கள் எங்கே? அவரை குப்பை அள்ள விட்டுவிட்டு கேமராமேனை வீடியொ எடுக்க சொல்லிவிட்டு எங்கே சென்றார்கள்? ஒரு வெளிநாட்டு அதிபர் வரவுக்காக பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டாவர்கள் இதை ஏன் சுத்தம் செய்யவில்லை?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒருபக்கம் இது பிரதமரின் நலனில் அக்கறை கொண்டு கேட்பது போல இருந்தாலும், மற்றொரு பக்கம் பிரதமரின் செயல்பாடுகளை வஞ்சபுகழ்ச்சியாய் விமர்சிப்பது போல இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :