இளைஞரை தூணில் கட்டி வைத்து, பெல்டால் அடித்த போலீஸார் ! பரவலாகும் வீடியோ

kanpur
sinojkiyan| Last Modified வெள்ளி, 8 நவம்பர் 2019 (19:26 IST)
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை  போலீஸார் தூணில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் வசித்த வந்த இளைஞர் ஒருவரை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
 
அப்போது காவல் நிலையத்துக்குச் செல்லும் வழியிலேயே அந்த இளைஞரை ஒரு தூணில் கட்டி வைத்த போலீஸார், தாங்கள் அணிந்திருந்த தோல் பெல்டால் மனிதாபிமானம் இல்லாமல்  அவரை  பலமாகத் தாக்கினர். வலி தாங்க முடியாமல்  இளைஞர் அழுது கதறினார். இதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

இளைஞரை தாக்கிய போலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :