1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (09:51 IST)

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ!
டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக கடந்த 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் ஊர்வலம் நடந்தது என்பதும் அதில் சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஹரியானா எம்எல்ஏ ஒருவர். ஹரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அபய் சவுதாலா என்பவர் டிராக்டரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்து உள்ளார் என்பதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறியுள்ளார் 
 
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து முதன்முதலாக எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய் இது உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது