வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (18:34 IST)

தாலியை கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதி: போலீஸார் கெடுபிடியால் பெண்கள் அதிர்ச்சி!

thali
தாலியைக் கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என தெலுங்கானா மாநில போலீசார் கெடுபிடி செய்ததால் தேர்வு எழுத வந்த திருமணமான பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தெலுங்கானா மாநிலத்தில் அரசு தேர்வு வாரியம் நடத்தும் குரூப் 1 தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வை எழுத வந்த திருமணமான பெண்களிடம் தாலியை கழற்றி வைத்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என பாதுகாப்புக்கு இருந்த போலீசார் கெடுபிடி செய்ததால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் தாலியை கழட்டி வெளியே வைத்துவிட்டு தேர்வு எழுதியதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பாஜக தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்
 
தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கட்டுமாறு கூறியதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்றும் போலீசார் சரியான புரிதல் இல்லாமல் இவ்வாறு செய்துள்ளனர் என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
 

Edited by Siva