1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 30 மே 2016 (08:46 IST)

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த போலீசார்

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த போலீசார்

ஜூன் 4 ம் தேதி அன்று போலீஸ் ஏட்டுக்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.
 

 
கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டுகள் தங்களுக்கு பல்வேறு குறைகள் துறைரீதியாக உள்ளது. அதை பல முறை தங்களது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் தீர்க்கப்படவில்லை என்றும், எனவே, இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜூன் 4 ஆம் தேதி அன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
  
ஆனால், அன்றைய தினம் ஏட்டுகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் ஏட்டுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடகா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கர்நாடகா அரசுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
 
இந்தியா சுதந்திரம் அடைந்து முதன் முறையாக போலீசாரே  போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.