டிராக்டர் பேரணிக்கு பத்து பக்கா கண்டீஷன் போட்ட போலீஸ்!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 26 ஜனவரி 2021 (08:22 IST)
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு போலீஸார்  முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ளனர். 

 
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்தன.  
 
இதனிடையே, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு போலீஸார் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள் பின்வருமாறு... 
 
1. குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகே பேரணியை தொடங்க வேண்டும். 
2. மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி நடத்தக்கூடாது. 
3. பேரணி செல்லும் வழியில் தர்ணா, ஆர்ப்பாட்டம், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த அனுமதி இல்லை. 
4. மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பேரணிக்கு அனுமதி. 
5. பேரணியின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை வேறு எந்த வாகனங்களையும் சேர்க்க கூடாது. 
6. பொது மக்களின் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேரணி நடத்த வேண்டும். 
7. பேரணி செல்லும் போது டிராக்டர்கள் நிற்க அனுமதி இல்லை. 
8. ஒவ்வொரு டிராக்டரிலும் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி. 
9. பேரணியின் போது மத அடையாளங்கள் உட்பட துப்பாக்கிகள், வாள், ஈட்டி போன்ற எந்த ஆயுதங்களும் எடுத்து செல்லக் கூடாது. 
10. நிபந்தனைகள் அடங்கிய கோப்பில் கையெழுத்திடும் சங்கங்கள் மட்டுமே பேரணியில் பங்கேற்க முடியும். 


இதில் மேலும் படிக்கவும் :