அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு அபராம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்த ஏ.கே.சிங்கால் என்பவர் டெல்லியில் உள்ள தனது தங்கைக்கு கடந்த ஆண்டு ரக்ஷா பந்தனை முன்னிட்டு ரூ.500 மணி ஆர்டர் மூலம் அனுப்பியுள்ளார்.
ஆனால் அது அவரது தங்கையிடம் சென்றடையவில்லை. இதுதொடர்பாக சிங்கால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.