1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:02 IST)

ஆகாசத்தை பார்த்து காத்திருந்த மக்கள்: ஹெலிகாப்டரில் இருந்து பணம் போட்டாரா மோடி??

பிரதமர் மோடி , ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவியுள்ளது. 
 
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கர்நாடகாவில் உள்ள சேனல் ஒன்று செய்தியை வெளியிட்டது. 
 
இதனால், கிராம மக்கள் பலர் ஹெலிகாப்டர் வரும் என வானத்தை பார்த்து காத்திருந்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மேலும், அந்த சேனலுக்கு இந்த செய்தி தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அந்த சேனலுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.