1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (13:50 IST)

மத்திய அமைச்சரவையை கலைக்க ஜனாதிபதி ஆணை

17வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்து புதிய எம்பிக்கள் தேர்வு பெற்றுள்ள நிலையில் புதிய அரசு வரும் 30ஆம் தேதி பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரை கடிதத்தை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 16வது மக்களவையை கலைக்க ஆணை பிறப்பித்தார். மேலும் 17வது மக்களவைக்கு தேர்வான எம்பிக்களின் விவரங்களும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
 
முன்னதாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 16வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் மோடி 16வது அமைச்சரவையை கலைக்கும்  அமைச்சரவை அளித்த பரிந்துரை கடிதத்தை நேரில் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது