Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் – பிரதமர் மோடி ஆவேச உரை !

Updated: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:24 IST)
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில்  44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் உரை நிகழ்த்தியுள்ளார்.

காஷ்மீரில் இன்று திடிரென்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை முக்கிய முடிவுகளை எடுக்கப் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத் துறை அமைச்சரவைக்கூட்டம் இன்று காலை அவசரமாகக் கூடியது.  இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஒருத் துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா சார்பில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் டெல்லியில் இன்று அதிவேக ரயில் சேவையைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி ‘தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர் தியாகத்தை அரசியலாக்கக் கூடாது. ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் துணிச்சல் மீது நான் அளவுக்கதிகமாக நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இதை விட அதிக விலைக் கொடுக்க வேண்டி இருக்கும்.’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

எல்லாம் காட்டு

புது சர்க்காரியா கமிஷன் விஜய் மேல வரும்!.. திருமுருகன் காந்தி எச்சரிக்கை!...

இடைத்தேர்தல்!.. திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை!. செந்தில்பாலாஜியை கழட்டிவிட்ட ஸ்டாலின்!...

விஜய் லண்டன் போகிறாரா? இல்லையா?.. நிலவும் குழப்பம்!...

ஆப்பிளின் பல ஆண்டு கனவு... முதல் Foldable ஐபோன் ரிலீஸ்.. விலை ரூ.2 லட்சமா?

பாஜக எம்.எல்.ஏவை செருப்பால் அடிக்க வேண்டும்.. ஆவேசமாக பேசிய அமைச்சரால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments