செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (11:31 IST)

என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சதி: தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு!

PM Modi
என்னை பிரதமரை பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்று பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கோடிக்கணக்கான பேர்களை வறுமை நிலையில் இருந்து மீட்டு உள்ளோம் என்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி ஆக்கியது பாஜக தான் என்றும் முத்ரா திட்ட கடன் உதவி உள்பட பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்றும் வெளிநாட்டு சக்தியுடன் சேர்ந்து சிலர் சதி செய்து வருகிறார்கள் என்றும் ஆனால் அவர்களால் என்னை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் பேசினார். 
 
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் மே 7ஆம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva