ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:08 IST)

இந்தியர்கள் என்ன சோம்பேறிகளா? நேருவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி..!

modi speech
இந்தியர்களை சோம்பேறிகள் என முன்னாள் பிரதமர் நேரு நினைத்தாரா என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றிய போது நாட்டின் திறனை நம்பாதது தான் காங்கிரஸ் கட்சியின் மனநிலை. தங்களை ஆட்சியாளர்களாகவும் பொதுமக்களே குறைந்தவரகளாகவும்  காங்கிரஸ் கட்சிக்கு கருதுகிறது. 
 
முன்னாள் பிரதமர் நேரு தனது அறிக்கையில் இந்தியர்களை சோம்பேறிகள் அறிவாற்றல் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. 
 
காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர், ஆனால் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது  என்று பிரதமர் மோடி தெரிவித்தார் 
 
Edited by Siva