புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 அக்டோபர் 2018 (14:55 IST)

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் - காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன் இன்னுயிரை நீர்த்த மகான் மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா மாந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 
அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தொடர்ந்து காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.