வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 டிசம்பர் 2018 (06:33 IST)

கருணாநிதி சிலையை திறந்து வைத்ததை பெருமையாக நினைக்கிறேன்: சோனியா காந்தி

திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, அதன் பின்  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

கருணாநிதி சிலையை திறந்து வைத்ததை பெருமையாக நினைக்கிறேன். கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். 60 ஆண்டுகால தமிழக அரசியலை கலைஞர் அவர்கள் நிர்ணயித்திருக்கிறார், கலைஞரின் சாதனைகளை நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கிறேன்.

13 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே காணாதவர் கருணாநிதி. 2004ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்த நாள் கலைஞருக்கு பெரும் மகிழ்ச்சி தந்த நாள். தமிழுக்கு காங்கிரஸ் அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது தான் கருணாநிதி வாழ்க்கையில் நிறைவான தருணம். தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி. தற்போதைய அரசியல் போராட்டத்தில் காங்கிரஸ் - திமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்