`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! மு.க. ஸ்டாலின்

Last Modified ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (20:06 IST)
நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியபடியே, `ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! என இன்றைய திமுக மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ராகுல் காந்தியை தான் பிரதமராக்க முன்மொழிவதாகவும், நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும் என்றால் மேடையில் மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை. இதுவே குஜராத்திலோ, மகராஷ்டிராவிலோ இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், அவர் வராமல் இருந்திருப்பாரா?. தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?’’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :