1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (17:28 IST)

பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது.. 140 கோடி மக்கள் சார்பாக பெற்றுக்கொள்கிறேன்..!

பிரதமர் மோடிக்கு கிரிஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து 140 கோடி இந்திய மக்கள் சார்பாக இந்த விருதை பெற்றுக் கொள்கிறேன் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தற்போது கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 
 
இந்த நிலையில் நாட்டின் உயரிய விருதான The Grand Cross of the Order of Honour என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை கிரீஸ் அதிபர் வழங்கிய நிலையில் இந்த விருதை 140 கோடி இந்திய மக்கள் சார்பாக பெற்றுக்கொள்கிறேன், விருது வழங்கியதற்கு நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran