ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (16:51 IST)

தடுப்பூசி போடுவது குறைவதற்கு என்ன காரணம்? – பிரதமர் மோடி ஆலோசனை!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்ட அதிகாரிகளிடம் இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில காலமாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதலாக இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தாலும் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் குறைவான அளவே தடுப்பூசி போட்டுள்ள, இரண்டாவது டோஸ் அதிகம் போடாத மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளை காணொளி மூலம் சந்தித்து பேசிய பிரதமர் மோடி ஆலோசனைகள் மேற்கொண்டதுடன், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.