1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi celebrate 71st birthday today

பிரதமர் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் தீப வழிபாடு!

பிரதமர் மோடி
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் 71 தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. 
 
அதுமட்டுமின்றி பிரதமரின் பிறந்தநாளுக்காக 71 கிலோ எடை கொண்ட கேக் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 71 ஒரு அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக் ஒன்றும் தயார் செய்து பிரதமருக்கு பிரதமரின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
நாடு முழுவதும் பாஜகவினர் பிரதமரின் 71வது பிறந்த நாளை கொண்டாடி அவரது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவினர் மட்டுமின்றி பிற அரசியல் கட்சி தலைவர்களும் பிரதமருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
அடுத்த கட்டுரையில்
உபி மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: காரணம் இதுதான்!