1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:21 IST)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா ஆனந்த்

பிரபல நடிகை பிரியா ஆனந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
வாமனன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ப்ரியா ஆனந்த் அதன் பின்னர் புகைப்படம், அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை, முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் 
 
தற்போது அவர் அந்த காசேதான் கடவுளடா, அந்தகன் ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பிரியா ஆனந்துக்கு வெப்துனியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்